சட்டிஸ்கரில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் கோடாரியால் ஒன்பது பெண்களை படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாண்டுரம் எனும் 35 வயதான இந்நபர் ஏற்கனவே மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அண்மையில் தனது மனைவியிடமிருந்து பிரிந்திருந்தாகாவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் ஐந்து பெண்கள் மற்றும் நான்கு சிறுமிகளை கோடாரியால் வெட்டிப்படுகொலை செய்துள்ளார். அவர்கள் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துள்ளனர்.
அவர் தனது கோடாரியுடனேயே கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25,000 ரூபாய் உதவித்தொகையாக வழங்க உள்ளூர் அமைப்புக்கள் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளால் இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் எழுந்திருந்தது. இந்நிலையில் இவ்வாறு கோடாரியால் தாக்கப்பட்டு உயிரிழந்த அனைவரும் பெண்கள் என்பது மேலும் அதிர்ச்சியுறச்செய்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக