ஹட்டன் - வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொசல்ல பகுதியில் தந்தை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று (05) காலை இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று வெளியான க.பொ.த. சா/த பரீட்சை பெறுபேறுகள்படி தனது மகன் சித்தியடையாமை காரணமாக வீட்டில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மனவிரக்தி அடைந்த தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வட்டவளை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
சடலம் தற்போது வட்டவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதை வட்டவளை வைத்தியசாலை வைத்திய அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
மரணம் குறித்த நீதவான் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
0 கருத்து:
கருத்துரையிடுக