கொலிவுட்டில் சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் ஆகிய படங்களில் நடித்த ஜெனிலியா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொலிவுட் மட்டுமின்றி தெலுங்கு, இந்தியிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நாயகி ஜெனிலியா.
ஜெனிலியாவுக்கும் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ் முக்குக்கும் காதல் மலர்ந்தது. இருவருக்கும் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பின்பு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இந்த நிலையில் தான் ஜெனிலியா கர்ப்பமாக இருப்பதாகவும் வீட்டில் தற்போது ஓய்வு எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ரிதேஷ் தேஷ்முக்கும் கணவர் குடும்பத்தினரும் ஜெனிலியாவை நன்றாக கவனித்துக் கொள்கின்றார்களாம்.
மேலும் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதாக இந்தி பட உலகினர் கிசுகிசுக்கின்றனர். ஆனால் ஜெனிலியா தரப்பில் இதை உறுதிபடுத்தவில்லை.
0 கருத்து:
கருத்துரையிடுக