சுவிட்சர்லாந்து-ஒரு மனிதரின் மூச்சுக்காற்றை பரிசோதனை செய்வதன் மூலம் அவருக்கு என்ன நோய் இருக்கிறது என்பதை அறிய முடியும் என சுவிட்சர்லாந்து நாட்டின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
மூச்சு வெளியேறும் போது, அதிலிருந்து வெளிவரும் இராசயனப் பொருட்களை ஆய்வு செய்த, ஜூரிக்கிலுள்ள ஸ்விஸ் ஃபெடரல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் ஆய்வாளர்கள், மூச்சுக்காற்றிலிருக்கும் பொருட்கள் ஒவ்வொரு தனி நபருக்கு தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும் எனவும், அது காலத்துடன் மாறாது எனவும் கண்டறிந்துள்ளனர்.
இனிவரும் காலங்களில் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகளுக்கு பதிலாக, மூச்சுக்காற்று பரிசோதனை செய்தாலே போதும் என்கிற நிலை உருவாகக் கூடும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அவ்வகையில், விளையாட்டுப் போட்டியில் பங்குபெறுபவர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தியுள்ளர்களா என்று பார்க்கவோ, அல்லது ஒரு நோயாளிக்கு எந்த அளவுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட வேண்டும் என்பதை கணிக்கவோ மூச்சுகாற்று பரிசோதனை செய்தாலே போதும் எனும் நிலை ஏற்படக் கூடும்.
மூச்சுக்காற்றை பரிசோதனை செய்வதன் மூலம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உடலியல் தன்மைக்கேற்ப, தனிப்பட்ட முறையில் மருத்துவ முறைகளை வடிவமைக்க முடியும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக