புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கருவுற்ற காலத்தில் பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பு, சோர்வு நிலை உள்ளிட்ட பல மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு.
அமெரிக்காவில் உள்ள லோவா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,
கர்ப்பிணிகளின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் 49 கர்ப்பிணி பெண்கள் பங்கேற்றனர்.

இவர்களில், 29 பேர் முதல் முறை கருத்தரித்தவர்கள். 17 பேர் இரண்டாவது முறையும், மூன்று பேர், மூன்றாவது முறையும் கர்ப்பம் தரித்தவர்கள்.

இவர்களின் கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்கு பின்னர் ஐந்து மாதங்களிலும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கண்காணிக்கப்பட்டன.

இந்த பெண்களில், 60 முதல் 70 சதவீதத்தினரின் குதிகால் அளவு குறைந்ததையும், பாதங்களின் நீளம் அதிகரித்ததையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இவர்கள், தாங்கள் முன்பு அணிந்ததை விட அதிக அளவுள்ள காலணிகளை வாங்கியது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கர்ப்ப காலத்தில், அதிகரிக்கும் உடல் எடை கொடுக்கும் அழுத்தம் காரணமாக, இந்த மாற்றம் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top