பாகிஸ்தானில் வாழ்ந்து வந்த பிரிட்டனை சேர்ந்த மேஜர் ஜாப்பரி என்ற பள்ளி ஆசிரியர் ஒருவர் தன்னுடைய 95ம் வயதில் பணியிலிருந்து ஓய்வு
பெற்று உள்ளார்.
பிரிட்டன் ராணுவத்தில் பணி புரிந்த மேஜர் ஜாப்ரி இரண்டாம் உலகப்போரின் பொழுது பாகிஸ்தானிற்கு வந்துள்ளார்.
பின்னர் பாகிஸ்தானிலேயே நிரந்தரமாக தங்கிவிட்ட ஜாப்ரி, ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று பள்ளி ஒன்றை தொடங்கியுள்ளார்.
அப்போது முதல் பள்ளி ஆசிரியராகவே பணியாற்றி வந்த ஜாப்ரி, தற்போது 95 வயது நிறைவடைந்துள்ள நிலையில் பணி ஓய்வை அறிவித்துள்ளார்.
தற்போது ஓய்வு கிடைத்துள்ளதால், பிரிட்டன் சென்று அங்குள்ள கல்லூரி மாணவர்களை சந்திக்கவும் திட்டமிட்டு உள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர், இம்ரான் கான், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், ஜபருல்லா கான் உள்ளிட்டோர் ஜாப்ரியிடம் படித்தவர்கள்.
மேலும் பாகிஸ்தானைச் சேர்ந்த, நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், ஜாப்ரியின் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக