புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


13 வயது சிறுமியுடன் காதல் கொண்டு அவளை கர்ப்பிணியாக்கிய பின் பிரதேசத்தைவிட்டுத் தப்பிச் சென்ற 19 வயது இளைஞனை கருவலகஸ்வெவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.


தப்போவ - பாவட்டாமடு பகுதியைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு கர்ப்பிணியாக்கப்பட்டுள்ளார்.

தாய் சிறு வயதிலேயே சிறுமியைவிட்டு சென்ற நிலையில் தந்தை மற்றும் பாட்டியின் அரவணைப்பில் சிறுமி வளர்ந்துள்ளார்.

அத்துடன், சிறுமி தனது பாடசாலை வாழ்க்கையையும் இடைநடுவில் கைவிட்டுள்ளார்.

இந்நிலையில் சிறுமி உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த போது சிறுமியின் பாட்டி அவளிடம் விசாரித்துள்ளார்.

அப்போது சிறுமி தனக்கு நடந்தவற்றை பாட்டியிடம் ஒன்றுவிடாமல் கூறியுள்ளார்.

அதனையடுத்து மித்தெனிய பொலிஸ் நிலையத்தில் இது குறித்து முறைப்பாடு செய்யப்பட்டு சந்தேகநபரான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும் இளைஞர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

சிறுமி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கருவலகஸ்வெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top