சவுதி அரேபியாவில் தற்பொழுது இருசக்கர வாகனங்களில் பயணிக்க பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
சவுதி அரேபியாவில் முஸ்லிம் மத சட்டங்களை கடுமையாக பின்பற்றப்படுகின்றன நிலையில் வாகனங்கள் ஓட்ட பெண்களுக்கு அனுமதி கிடையாது.
பூங்கா, கடற்கரை போன்ற பொழுது போக்கும் இடங்களிலும் பெண்கள் இருசக்கர வாகனங்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆண் உறவினர்களுடன், பர்தா அணிந்த நிலையில் இருசக்கர வாகனங்களில் பயணிக்க தற்போது அந்நாட்டு பொலிசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
மேலும் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஓட்ட விரும்பும் பெண்கள், ஆண்கள் நடமாட்டம் இல்லாத மறைவான பகுதிகளில் ஓட்டலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக