உலகம் முழுவதும் ஏப்ரல் 1-ந் தேதியை அனைவரும் முட்டாள்கள் தினமாக கடைபிடித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முட்டாள்கள் தினம் உலகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை
இணையதளத்தில் கொடிகட்டிப்பறக்கும் கூகுள் நிறுவனமும் கொண்டாடியது.
கூகுள் நிறுவனம் கடந்த எட்டு வருடங்களாக வாடிக்கையாளர்களால் விரும்பிப் பார்க்கப்படும் யூடியூப் என்னும் தங்களது வீடியோ தள சேவையை மார்ச் 31-ஆம் தேதி இரவுடன் நிறுத்துகின்றது என்ற அறிவிப்பினை வெளியிட்டது.
தி ஆனியன் என்ற தொலைக்காட்சி பொழுதுபோக்கு தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியைத் தேர்வு செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டது யூ டியூப் என்றும், பத்து வருடங்களுக்குப் பின்னர் இந்தத் தளம் மீண்டும் இயங்கத் துவங்கும்போது, வெற்றி பெற்ற நிறுவனத்தின் பெயர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தது.
ஆனால், ஞாயிறன்று இரவு, 12 மணிக்குமேல், இது ஒரு முட்டாள்கள் தின அறிவிப்பு என்பதனை அறிவித்த கூகுள் நிறுவனம், இதுபோல் தாங்கள் முன்னால் செய்த சில சம்பவங்களையும் நினைவு கூர்ந்தது
0 கருத்து:
கருத்துரையிடுக