அமெரிக்காவை சேர்ந்த இலி ரெய்மெர் என்ற 15 வயது சிறுவன் மலை ஏறுவதில் மிகவும் ஆர்வம் உள்ளவனாகவும், அதற்கு தகுந்த பயிற்சியும் பெற்று வந்துள்ளான்.
மேலும் உலகில் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்க வேண்டும் என்ற லட்சியத்தோடும் வாழ்ந்திருக்கிறான்.
இந்நிலையில் அவனை கடும் நோய் ஒன்று தாக்கியுள்ளது. இருப்பினும் அவன் லட்சியம் மாறாமல் எவரெஸ்ட் சிகரத்தில் 17,600 அடி உயரம் ஏறி உள்ளான்.
இதனைத் தொடர்ந்து இன்னும் ஓரிரு தளங்களை அடைந்து எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஏறி சாதனை படைப்பான் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக