பிரேசிலில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த பெண்ணொருவர் தனது காதலர் கண்ணெதிரிலே பாலியல் வன்முறைக்குட்படுத்தபட்டுள்ளார்.
அந்நாட்டில் ரியோ டீ ஜெனிரோவில் என்ற இடத்தில் இந்த காதலர்கள் பேருந்தில்
பயணித்துக்கொண்டிருந்தனர்.
அப்பொழுது திடீரென்று அப்பேருந்தில் ஏறிய இருவர் மற்றைய பயணிகளை கீழே இறங்கும் படி உத்தரவிட்டுள்ளனர்.
அவர்கள் கீழே இறங்கியதும் பேருந்தை வேறொரு இடத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளனர். பின்னர் குறித்த பெண்ணின் காதலனை மோசமாகத் தாக்கி அவருக்கு விலங்கிட்டுள்ளனர்.
பேருந்தை ஒருவர் செலுத்த மற்றையவர் அப்பெண்ணை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். இவ்வாறு மாறி மாறி இருவரும் அப்பெண்ணை பல தடவை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளனர். இதுமட்டுமன்றி அவர்களது பணத்தினை கொள்ளையடித்துள்ளனர்.
இத்தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தொடர்புடைய 2 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டுள்ள இருவரும் 20 மற்றும் 22 வயதானவர்கள் என கருதப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக