புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா-கேரளா இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே உடும்பனூர் ஊராட்சியில் உப்புகுன்னு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தவல்லி(58)இவரது கணவர் பாஸ்கரன், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு
இறந்து விட்டார்.

இரண்டு மகள்கள் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகின்றனர். ஆனந்தவல்லி மகன் சுதனுடன்(37) வசித்து வந்தார்.

மது போதைக்கு அடிமையான சுதனுக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் நான்கு நாட்களாக ஆனந்தவல்லியை காணவில்லை.

இது குறித்து ஆனந்தவல்லியின் மகள் ஷீலாவுக்கு அருகில் வசிக்கும் நபர்கள் தகவல் தெரிவித்தனர். தாயை தேடி ஷீலா வீட்டிற்கு வந்தபோது வீட்டிற்குள் நுழைய சுதன் அனுமதிக்கவில்லை.

அதன்பின் ஷீலா,சகோதரர் சுதன் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் வந்து பார்த்தார். வீட்டின் பின் புறம் சென்று பார்த்தபோது, புதிதாக குழி வெட்டி, மண் மூடப்பட்டிருந்தது. சந்தேகம் அடைந்த ஷீலா,கரிமண்ணூர் போலீசில் புகார் அளித்தார்.

இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் வீட்டின் பின் புறம் மூடப்பட்டிருந்த புதிய குழியை தோண்டினர். குழியில் ஆனந்தவல்லியின் உடல் அழுகிய நிலையில் இருந்தது.

உடல் முழுவதும் காயங்கள் இருந்தது. முதல் கட்ட விசாரணையில் சுதன், தாய் ஷீலாவை கொலை செய்து,புதைத்துள்ளது தெரிய வந்துள்ளது. கொலைக்கான காரணம் தெரியவில்லை. தலைமறைவான சுதனை,போலீசார் தேடி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top