இந்தியா-வெளியூருக்கு போய் வருவதற்குள் அரசு தோண்டிய கிணற்றை யாரோ திருடி விட்டதாக நெல்லை கலெக்டரிடம் விவசாயி ஒருவர் கூறிய புகாரால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்கரன்கோவில் அருகே உள்ள நொச்சிகுளம் காலனி நடுத்தெருவை சேர்ந்தவர் விவசாயி முத்துபாண்டி. இவர் நெல்லை கலெக்டரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், கூறியிருப்பதாவது: எனது ஊரில் சர்வே எண் 3-11ஏ என்ற புஞ்சை நிலம் எனது தந்தையால் வள்ளியம்மாள் என்பவரிடம் இருந்து வாங்கப்பட்டது. இதற்கு நான் தீர்வை செலுத்தி அனுபவித்து வருகிறேன். இதில் ஜூவன்தாரா திட்டத்தில் கிணறு வெட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் நான் ஒரு வருடமாக பிழைப்புக்காக வெளியூருக்கு சென்றிருந்தேன். திரும்பி வந்து பார்த்த போது எனது நிலத்தில் வெட்டப்பட்டிருந்த ஜீவன்தாரா கிணற்றை காணவில்லை.
தாங்கள் அதை தேடி பிடித்து தரும்படி கேட்டு கொள்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடிவேலு பாணியில் வந்துள்ள புகார் மனுவால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பும், அதிர்ச்சியும் அடைந்தது.
0 கருத்து:
கருத்துரையிடுக