புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஆந்திராவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் வெயில் கொடுமைக்கு 21 பேர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்

.
ஆந்திர மாநிலத்தில் தெலங்கானா, ராயலசீமா ஆகிய பகுதியில் கத்தரி வெயில் கொளுத்தி வருகிறது.

ஆனால் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்து வருகிறது. இந்த இரு சீதோஷ்ண நிலை களால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதில் மெதக், நலகொண்டா, ரங்காரெட்டி, பிரகாசம், கிருஷ்ணா, குண்டூர், நெல்லூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் வெயில் கொடுமைக்கு 21 பேர் மயங்கி விழுந்து இறந்துள்ளனர்.

ரங்காரெட்டி மாவட்டம் இப்ரகிம்பட்டினம் என்ற இடத்தில் ஏரிக்கரையோரம் இருந்த மிகப்பெரிய ஆலமரத்தில் இடி விழுந்ததில் ஆலமரம் எரிந்து சாலையில் விழுந்தது.

இதனால் அப்பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொலிசார் விரைந்து சென்று மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.

 
Top