புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தேனி அல்லிநகரம் வடக்கு மச்சாள் தெருவை சேர்ந்த கருப்பையா மகன் அய்யப்பன் (வயது 25). இவரும் எட்டையபுரத்தை சேர்ந்த ராசு மகள் முருகேஸ்வரி (22) என்பவரும் காதலித்து வந்தனர்.


இவர்கள் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கடந்த 1 வருடத்துக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி அருப்புக்கோட்டையில் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் கோவையில் வசித்து வந்தனர். அங்கு அய்யப்பன் கூலி வேலை பார்த்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முருகேஸ்வரி தனது தலைபிரசவத்திற்காக அல்லிநகரத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு வந்தார். அங்கு அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

இந்த சூழ்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக அய்யப்பன் கடந்த வாரம் கோவையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனக்கு குழந்தை பிறந்து 1 1/2 மாதத்திலேயே தனது காதல் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் முருகேஸ்வரிக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனால் நேற்று தனது பச்சிளம் குழந்தை மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்தார். பின்னர் தனது உடலிலும் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் இருவரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து அல்லிநகரம் nghypஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
 
Top