இந்தியா-பீகார் மாநிலத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரை 11,000 ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பீகார் மாநிலத்தின் உள்ள பூர்ணியா மாவட்டத்தில் அஜோகொபா என்னும் இடத்தில் வசித்து வந்த 20 கர்ப்பிணி பெண் ஒருவரை 11,000 ரூபாய்க்கு விற்க முயற்சி நடந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் லாரி கிளீனராக உள்ளார். இவர்களுக்கு 4 மற்றும் 5 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது இவர் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இப்பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில், அவருக்கு அறிமுகமான ஒரு பெண் அவர் வீட்டிற்கு வந்தார். உனக்கு பண உதவி வாங்கி தருகிறேன் என்று கூறி அவர் இவரை அழைத்து சென்றார்.