புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மாத்தறை, அக்குரஸ்ஸ ஓய்வு பெற்ற ஆயுர்வேத பெண் டாக்டர் ரொயின் திவித்துரு கமகே (வயது 72) பாலியல் வல்லுறவு கொண்ட பின் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக மாத்தறை சட்ட வைத்திய அதிகாரியின்
அறிக்கையில் முன்வைத்து அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரவு நித்திரைக்குச் சென்ற இவர் 9ஆம் திகதி கட்டிலிலே பிரேதமாக கிடப்பதை பொலிஸார் கண்டு பிடித்தனர். கூரை வழியாக இறங்கிய நபரே இவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்துள்ளார் என பொலிஸ் விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

சம்பவம் இடம்பெறும் போது சமையற்காரனைத் தவிர வேறு எவரும் வீட்டில் இருக்கவில்லையாம்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாத்தறை மேலதிக நீதிவான் மஞ்சுள கருணாரத்ன விசாரணை நடாத்தி சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துமாறு உத்தரவிட்டார். வீட்டிலிருந்த பணமோ, நகைகளோ கொள்ளையடிக்கப்படவில்லை.

 
Top