தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, கள்ளக்காதலருடன் இணைந்து பிராந்தி பாட்டிலால் கழுத்தை அறுத்து கொலை செய்தார் மனைவி. இதுதொடர்பாக 3
பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த ஜூஜூவாடி எஸ்.எல்.வி., நகரை சேர்ந்தவர் மெய்யழகன். 42 வயதான இவர் கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளியில் உள்ள ஒரு பி.வி.சி.பைப் நிறுவனத்தில் தொழில்நுட்ப மேலாளராக பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி ஜெயந்தி. 30 வயதாகிறது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த, 10-ம் தேதி ஜூஜூவாடி செந்தில் நகரில் மெய்யழகன், பிராந்தி பாட்டிலால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஜெயந்தி மீது சந்தேகம் வந்ததால் அவரைத் துருவித் துருவி விசாரித்தனர். அப்போது கிடைத்த தகவல்கள்....
ஜெயந்திக்கும், மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த செல்ஃபோன் கடை அதிபரான 29 வயது பிரபுவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
மெய்யழகன் வீட்டில் இல்லாத போது, பிரபு அவரது வீட்டிற்கு சென்று ஜெயந்தியுடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். இதையறிந்த மெய்யழகன், மனைவியை கண்டித்துள்ளார்.
இதை ஜெயந்தி, பிரபுவிடம் கூறியுள்ளார். இதையடுத்து, இருவரும் தங்களுடைய கள்ளக்காதலுக்கு இடை யூறாக உள்ள மெய்யழகனை கொலை செய்ய திட்டமிட்டனர்.
அதன்படி, கடந்த, 9-ம் தேதி இரவு பிரபு மற்றும் திருவள்ளுவர் நகரை சேர்நத அவரது நன்பர் சரண் ஆகியோர், , மெய்யழகனை செந்தில் நகருக்கு அழைத்து சென்று பிராந்தி பாட்டிலால் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர் இருவரும் தலைமறைவாகினர்.
ஜெயந்தியிடம் விசாரணை செய்ததன் மூலம் துப்பு துலங்கிய போலீசார் அவரது கள்ளக்காதலன் பிரபு, அவரது நண்பர் சரண் ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரனையில், சனிக்கிழமை அத்திப்பள்ளிக்கு வேலைக்குச் சென்ற மெய்யழகனை, பிரபு, சரவணன் இருவரும் பின் தொடர்ந்து சென்று செந்தில் நகரில் வைத்து இருவரும் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட ஜெயந்தி உள்பட மூவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.