பிரான்சில் 60 வயது முதியவர் ஒருவருக்கு சிறுமிகளின் மோகம் அதிமாக இருந்ததால், காசாபிளாங்கா நகர் நீதிமன்றம் இவருக்கு 12 வருடச் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
பிரான்சைச் சேர்ந்த முதியவர் ஒருவர் சிறுவர்
மோகம் கொண்டு சிறுவர்களைத் தேடி சுகித்து இருந்து வந்தார்.
இவர் மீது நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவானதும் இவர் தண்டனைக்குப் பயந்து ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவுக்கு ஓடி ஒளிந்து கொண்டார்.
அங்கு வீட்டு வேலைக்கு இரண்டு இளம் பெண்களை அமர்த்தி அவர்களோடும் உறவு கொண்டிருந்தார்.
பின்னர் அந்த வீட்டு வேலைக்காரிகள் மூலமாக பத்து வயதுச் சிறுமிகளை அழைத்து வரச்செய்து அவர்களையும் பயன்படுத்திக் கொண்டார்.
சிறுமிகளை அழைத்து வந்த குற்றத்திற்காக வேலைக்காரிகள் இருவருக்கும் எட்டுமாத சிறைத்தண்டனை கிடைத்துள்ளது.
இந்த முதியவரால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்துக்கு அறுபதினாயிரம் திர்ஹாக்கள்(ஏழாயிரம் டொலர்) தரும்படி அவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. மேலும் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கி உத்தரவிட்டுள்ளது