கொலிவுட்டில் வெளியான காஞ்சனா வெற்றியைத் தொடர்ந்து லாரன்ஸ் இயக்கி நடிக்கும் திரைப்படம் முனி 3.
இந்தப் படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். முதலில் இந்த கதாபாத்திரத்தில் லட்சுமிராய் தான் நடிப்பதாக இருந்தது.
ஆனால் அவர் திடீரென மாற்றப்பட்டு இப்போது டாப்ஸி நடித்து வருகிறார். இதேபோல் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
3 மற்றும் அனிருத்தின் எதிர்நீச்சல் படப் பாடல்களும் சூப்பர் ஹிட்டானதால் முனி 3 படத்திற்கு அவரையே ஒப்பந்தம் செய்திருக்கிறார் லாரன்ஸ்.
பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம் கொண்டா சுரேஷ் தயாரிக்கிறார். இதற்கு முன்பு லாரன்ஸ் இயக்கிய முனி, முனி 2(காஞ்சனா) ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்றன.
இந்நிலையில் முனி 3 முந்தைய இரண்டு படங்களை விட திகில் நிறைந்ததாக இருக்குமாம்.
மேலும் காஞ்சனாவில் மூன்று வேடங்களில் நடித்த லாரன்ஸ் இந்தப் படத்தில் 6 வேடங்களில் அசத்த இருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.