ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சல்லிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனிப்பாண்டி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த விரோதம்
காரணமாக அடிக்கடி அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று கருப்பசாமி அவரது சகோதரர்கள் செல்லத்துரை, முருகன், உறவினர் பசுபதி, செல்லத்துரையின் மனைவி மகாலட்சுமி, முருகனின் மனைவி சிவகாமி, பசுபதியின் மனைவி லெட்சுமி ஆகியோர் முனிப்பாண்டியின் வீட்டுக்குள் புகுந்து அவரையும் அவரது மனைவி முத்து நாச்சியாரையும் தாக்கி அரிவாளால் வெட்டியதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலட்சுமி, சிவகாமி, லெட்சுமி ஆகியோரை கைது செய்தனர். கருப்பசாமி உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.