ஐ வில் ஓல்வேய்ஸ் லவ் யூ' என்று விமானத்தில் பாடிய பெண்ணொருவர் விபரீதத்ததை எதிர்கொண்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது
பயணிகளை அசௌகரிய படுத்தும் வகையில் இவர் பாடியதால், தான் பயணித்த விமானத்திலிருந்து பலவந்தமாக இறக்கிவிடப்பட்டுள்ளார்.
6 மணித்தியால பணத்தை மேற்கொண்டு அமெரிக்காவின் லொஸ் ஏன்ஜல்ஸ் நகரத்திலிருந்து நியூ யோர்க்கிற்கு பயணம் மேற்கொண்ட விமானமே இவ்வாறு திட்டமிடப்படாத வகையில் கான்சாஸ் நகரில் தரையிரங்கியது.
இதனால் குறித்த பெண்ணின் தொல்லையிலிருந்து ஏனைய பயணிகள் மீண்டுள்ளனர்.
'குறித்த பெண் ஏனைய பயணிகளை அசௌகரியத்திற்குள் ஆழ்த்திவிட்டார். எனவே அவரை இடையிலே இறக்கிவிடும் நிலை ஏற்பட்டது' என விமான நிலைய பேச்சாளரான ஜோ மைக்பிரைட் தெரிவித்தார்.
விசாரணைகளின் பின்னர் குறித்த பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.