மட்டக்களப்பு பட்டிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலைக்குடாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பட்டிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
முதலைக்குடா மேற்கு பாடசாலை வீதியை சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண்ணொருவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்ப பிரச்சினை காரணமாகவே மனமுடைந்த நிலையில் குறித்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்ப விசாரணை மூலம் தெரிய வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தகப்பன் இல்லாத நிலையில் குடும்பத்தினை குறித்த பெண்னே உழைத்து காப்பாற்றி வந்ததாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரண விசாரணையை தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பட்டிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பட்டிப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.