புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தற்போது வளர்ந்துவரும் இசையுலகில் பாடல்களை ஒரே டேக்கில் பாடவேண்டுமென்பதில் அவசியமில்லை.
முன்னைய காலத்தில், அதாவது
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த காலத்தில் ஒரு பாடலை பாடத்தொடங்கினால் முழுப்பாடலையும் ஒரே டேக்கில் பாடி முடித்து விட வேண்டும்.

இல்லையேல் மீண்டும் மீண்டும் அந்த பாடலை முதலில் இருந்து பாட வேண்டியதிருக்கும். ஆனால் இப்போ டெக்னாலஜி வளர்ந்து விட்டதால், ஒவ்வொரு லைனாககூட பாடலாம் என்கிற நிலை தற்போது உருவாகியிருக்கிறது.

அதனால்தான் சமீபகாலமாக பெரிய அளவில் இசையாற்றல் இல்லாதவர்கள்கூட தைரியமாக பின்னணி பாடி வருகிறார்கள்.

இந்த நிலையில், வர்ஷா என்ற 6 வயது சிறுமி, தீக்குளிக்கும் பச்சை மரம் என்ற படத்துக்காக "நரி வருது நரி வருது காக்கா காக்கா பறந்து வா..." என்ற பாடலை ஒரே டேக்கில் பாடி முடித்திருக்கிறார்.

முதலில் இந்த வர்ஷாவை ஒரு ட்ராக் பாடத்தான் அழைத்தார்களாம். ஆனால் அவரது குரல் இனிமையைக்கேட்ட இசையமைப்பாளர் ஜித்தின், பின்னர் வர்ஷாவையே அந்த பாடலை முழுவதையும் பாட வைத்திருக்கிறார்.

ஒரு 6 வயது சிறுமி ஒரு முழுப்பாடலையும் டேக் வாங்காமல் பின்னணி பாடிய சம்பவம் கொலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


 
Top