கொலிவுட்டில் 7ம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஸ்ருதிஹாசன்.
இதன் பின்பு தனுஷுடன் 3 படத்தில் நடித்தார். இந்தப் படம் தோல்வியடைந்ததால் ஸ்ருதிஹாசன் தன்னுடைய முழு கவனத்தையும் தெலுங்கு திரையுலகம் பக்கம் திருப்பினார்.
அங்கு எதிர்பார்த்த படியே வெற்றி கிட்டியது. ஸ்ருதி நடித்த கப்பர் சிங் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதால், அவரை தேடி வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந் நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகை போட்டியில் இருக்கும் ஸ்ருதிஹாசன் 'டி டே' என்ற பாலிவுட் படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
மற்ற நடிகைகள் நடிக்கத் தயங்கும் கதாப்பாத்திரத்தில் துணிந்து நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.
நிகில் அத்வானி இயக்கும் இந்தப் படத்தில் ஸ்ருதியுடன் ரிஷி கபூர், அர்ஜுன் ராம்வால் மற்றும் பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அண்மையில் பிரபல ஆங்கில பத்திரிக்கையான மேக்ஸிம் இதழின் அட்டை படத்தில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து ஸ்ருதி ஹாசன் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி ஒட்டுமொத்த திரையுலத்தினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளார்.