இந்தியில் தனுஷ் முதன்முதலாக நடித்துள்ள படம் ராஞ்சனா. இந்த படம் அம்பிகாவதி என்ற பெயரில் தமிழிலும் வெளியாக உள்ளது.
இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் சோனம் கபூர். தனுசைப்போலவே உடல் எடையைக்குறைத்து பள்ளி மாணவி கெட்டப்பில் நடித்திருக்கும் சோனம்கபூர், அப்படத்தில் தனுசுடன் நடித்த இனியமையான அனுபவங்களை மும்பை மீடியாக்களில் பகிர்ந்து கொண்டு வருகிறார்.
அது மட்டுமின்றி, நடிகர் அனில்கபூரில் மகளான சோனம்கபூர், எதிர்காலததில் தனக்கு கணவராக வருகிறவர் தனுஷ் மாதிரியே இருக்க வேண்டும் என்று பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
மேலும், இந்த படத்தில் ராஞ்சனா என்றால் அது தனுஷ்தான். அவரைப்போன்று யாருமே கிடையாது. அப்பாவித்தனமான அவர் பழகுவதற்கு ரொம்ப இனிமையானவர்.
அவருடன் பழகின பிறகு எதிர்காலத்தில் இவரை மாதிரி மாப்பிள்ளை பார்த்துதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கே வந்து விட்டேன் என்று கூறியுள்ள சோனம் கபூர், தமிழ்நாட்டுக்கு சென்று தனுஷ் மாதிரியான ஒருவரைத்தான் தேர்வு செய்வேன் என்று நினைக்கிறேன் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.