அம்மா என்றாலே அழகுதான். அம்மாவின் அன்பிற்கு ஈடு இணையில்லை. சினிமாவில் அம்மாவாக நடித்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் அவ்வளவு எளிதில் குழந்தை பெற்றுக் கொள்ள நினைப்பதில்லை.
அதுபற்றி செய்தி வந்தால் கூட மறுப்பு வெளியிடுவார்கள். ஆனால் கோலிவுட், பாலிவுட் திரை உலகில் பிரபலங்களாக வலம் வந்த நட்சத்திரங்கள் சிலர் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை, குடும்பம் என்று செட்டில் ஆகிவிட்டனர்.
ஒருசில நடிகைகள் மட்டுமே அம்மாவான பின்னரும் அதே அழகுடன் வலம் வருவார்கள். அப்படிப்பட்ட அழகு அம்மாக்களைப் பற்றி அன்னையர் தினம் கொண்டாடப்படும் இந்த வேளையில் நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.
ஐஸ்வர்யா தனுஷ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகள், நடிகர் தனுசின் மனைவி ஐஸ்வர்யா இரண்டு குழந்தைக்கு அம்மாவான பின்னர்தான் படத்தை இயக்கத் தொடங்கினார். யாத்ரா, லிங்கா என்ற இரண்டு குழந்தைகளின் அழகு அம்மா ஐஸ்வர்யா.
ஐஸ்வர்யா ராய்
மகள் பெயர் உலக அழகி ஐஸ்வர்யா அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு இப்போது ஆராத்யா என்ற அழகு குழந்தையின் அம்மாவாக இருக்கிறார். குழந்தை பிறந்த பின்னர் சினிமாவில் நடிக்காமல் விளம்பரத்தில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் ஐஸ்.
கஜோல் அஜய் தேவ்கான்
பாலிவுட் உலகின் கனவுக் கன்னி கஜோல் அஜய் தேவ்கானை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆண், பெண் என இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான பின்னரும் இன்னமும் கொஞ்சமும் அழகு குறையாமல் இருக்கிறார் கஜோல்.
ஜோதிகா சூர்யா
தென்னிந்தியாவின் அழகு தேவதை ‘ஜோ’ சூர்யாவை மணந்த பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கியிருக்கிறார். தியா, தேவ் என்ற இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான பின்பும் அழகு கொஞ்சமும் குறையவில்லை.
ஷாலினி அஜீத்
கோலிவுட்டின் அழகு ஜோடி அஜீத் – ஷாலினி. திருமணத்திற்குப்பின்னர் அழகு குழந்தை அனோஷ்காவிற்கு அம்மாவான பின்னர் இன்னமும் அதே இளமையோடு இருக்கிறார் ஷாலினி. சினிமாவை விட்டு ஒதுங்கினாலும் பேட்மிட்டன் விளையாட்டில் ஆர்வம் காட்டுகிறார்.
சிம்ரன்
பாலிவுட் திரை உலகில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு என தென்னிந்தியா முழுவதும் வலம் வந்த சிம்ரன் இப்போது இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகியிருக்கிறார்.ஜெயா டிவியில் ஜாக்பாட் நடத்திவரும் சிம்ரன் இப்போது சூர்யாவின் துருவநட்சத்திரம் படத்தில் பிஸியாக இருக்கிறார்.
ரம்பா
கன்னடத்தில் அறிமுகமாகி தமிழில் பிஸியாக வலம் வந்தவர் ரம்பா. திருமணத்திற்குப் பின்னர் சினிமாவைவிட்டு ஒதுங்கிவிட்டார். அழகான பெண் குழந்தைக்கு அம்மாவாகிவிட்டார்.
ரோஜா
90 களில் கவர்ச்சியிலும், நடிப்பிலும் கலக்கியவர். இயக்குநர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டு இப்போது இரண்டு குழந்தைகளின் அம்மாவாகியிருக்கிறார். அரசியலிலும், சினிமாவிலும் வலம் வருகிறார் ரோஜா.
மீனா
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி குமரியானதுவரை பல பிரபல நடிகர்களுடன் நடித்தவர் மீனா. மென்பொருள் எஞ்சினியர் வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டு நனிகா என்ற பெண் குழந்தைக்கு அம்மாவாகியிருக்கிறார். இப்போது சின்னத்திரையில் நடுவராக களம் இறங்கியிருக்கிறார்.
ரம்யாகிருஷ்ணன்
200 படங்களுக்கு மேல் நடித்தும் அழகு மாறாமல் இருப்பவர் ரம்யா கிருஷ்ணன். இப்போது சின்னத்திரையில் பிரபல நடிகை. 2003ம் ஆண்டு இயக்குநர் கிருஷ்ணவம்சியை திருமணம் செய்து கொண்டு ரித்விக் என்ற அழகு ஆண் குழந்தையின் அழகு அம்மா இவர்.