சட்டவிரோதமாக புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாகக் கூறப்படும் 29 வயதான இந்திய பிரஜை ஒருவரை வல்வெட்டித்துறை பொலிஸார் நேற்று
புதன்கிழமை கைதுசெய்துள்ளனர்.
இவர் 77 சாறிகளையும் 78 பஞ்சாபி ஆடைகளையும் வைத்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சந்தேக நபரின் விஸா காலவதியான நிலையில் குடிவரவுச் சட்டங்களை மீறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.