திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை அஞ்சு அரவிந்த் பெயரில் போலியான பேஸ்புக் பக்கத்தைத் தொடங்கி அதில் அவரைப் பற்றி ஆபாசமாகவும், மார்பிங் செய்த நிர்வாணப் படங்களைப் போட்டும்
அட்டூழியம் செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அஞ்சு அரவிந்த் தன்னைக் காதலிக்க மறுத்ததால் இந்த விஷமத்தை அவர் செய்தாராம்.
மலையாள நடிகையான அஞ்சு அரவிந்த் தமிழில் பூவே உனக்காக, ஒன்ஸ்மோர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் கொச்சி போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் கொடுத்தார்.
அதில், அதில் தனது பெயரில் போலியான போஸ்புக் செயல்படுவதாகவும், அதில் தன்னை ஆபாசமாக சித்தரித்திருப்பதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், திருவனந்தபுரம் அருகே உள்ள சிறையின் கீழ் பகுதியை சேர்ந்த அசீம் (33) என்பவர் சிக்கினார்.
இவர் அஞ்சு அரவிந்த் மீது மோகம் கொண்டார். அவரைத் திருமணம் செய்ய முடிவெடுத்தார். இதையடுத்து அஞ்சுவுக்கு அவரது இமெயில் மூ்லம் அடிக்கடி செய்திஅனுப்பினார்.
இதனால் கோபமடைந்த அஞ்சு அவரை கடுமையாக எச்சரித்தார். இதனால் கோபமடைந்த அசீம், போலியான பேஸ்புக்கைத் தொடங்கி அஞ்சு குறித்து ஆபாசமாகவும், மார்பிங் செய்த நிர்வாணப் படங்களையும் போட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அசீம் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.