புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பாடசாலை முடிந்து வீடு திரும்புவதற்காக பாடசாலை வேனை எதிர்ப்பார்த்து பாடசாலை அருகில் விளையாடிகொண்டிருந்த 8 வயது சிறுவன் அருகிலிருந்த பாதுகாபற்ற கிணறொன்றில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.


பண்டாரவளையிலேயே இந்த சம்பவம் இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பண்டாரவளை சீவலி மகா வித்தியாலயத்தில் முதலாம் தரத்தில் கல்வி பயிலும் கசுன் லக்ஷhன் எனும் 8 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாடசாலைவிட்டு வீட்டுக்கு இன்று மாலை செல்வதற்காக செல்லும் வேனை எதிர்பார்த்து சக மாணவர்களுடன் விளையாடிகொண்டிருந்த போது குறித்த மாணவன் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் பண்டாரவளை அரசினர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
Top