புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ஜிவ்ரு என்ற இடம் உள்ளது. இந்த ஊரை சேர்ந்தவர் பிரிக்டன் டாமா (வயது 34). இவர் திடீரென மயங்கி விழுந்து விட்டார். உடலில் எந்த அசைவும் இல்லை. எனவே
அவர் இறந்து விட்டதாக கருதப்பட்டது. இதனால் அவருக்கு இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தன.
சவப்பெட்டிக்குள் உடலை வைத்து அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள். அப்போது அவருடைய காலில் லேசான அசைவு ஏற்பட்டது.

இதை ஒருவர் கவனித்து விட்டார். உடனே அவர் இதுபற்றி மற்றவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதனால் அவரை சவபெட்டிக்குள் இருந்து வெளியே எடுத்தனர்.

அப்போது உடல் பகுதியிலும் அசைவு தெரிந்தது. உடனே அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
Top