புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிள்ளைப் பருவத்தின் துடுக்குத்தனம் சில பிள்ளைகளுக்கு வினையாகவும் அமைந்துவிடுகின்றது.  தெஹியத்தகண்டி – நிகவதலந்த பகுதியிலுள்ள முன்பள்ளியில் மழலை மொழி பேசுகின்ற சிறார்களுக்கு மத்தியில் ‘ஹசித்த’ இன்று இல்லை.


நான்கு வயதான ஹசித்த பிரமோத் வீரசிங்க, தனது வீட்டிற்கு 200 மீற்றர் தொலைவில் பாழடைந்த காணியொன்றில் தோண்டப்பட்டிருந்த குழியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த காணியில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமொன்றின் தூண்களை  நடுவதற்காக 7 அடி ஆழத்தில் நான்கு குழிகள் தோண்டப்பட்டிருந்தன.

நீர் நிரம்பிய அந்தக் குழிகளைப் பார்ப்பதற்காக ஹசித்த தனது மூத்த சகோதரருடன் கடந்த திங்கட்கிழமை மாலை 5.30 அளவில் சென்றுள்ளார்.

இதன்போதே குழிக்குள் சருக்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார் ஹசித்த.
 
Top