சிலி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், தினசரி 3 முறை ரத்தக்கண்ணீர் வடிக்கிறார். உடம்பில் அடிபட்டு ரத்தம் வந்தாலே அச்சம் வரும். இந்த பெண்ணின் ரத்தக்கண்ணீரை நிறுத்த செய்வதறியாது திகைக்கின்றனர் மருத்துவர்கள். சிலி நாட்டின் லாஸ் லாகோஸ் மாகாணம் புராங்க் பகுதியை சேர்ந்தவர் (Yaritza Oliva) ஜோஸ் ஒலிவா, கார்பென்டர். இவரது மகள் யாரிட்ஷா ஒலிவா (20).
இவர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். பிறந்தது முதல் சராசரிப் பெண்ணாகத்தான் வளர்ந்தார் யாரிட்ஷா ஒலிவா. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு நாள் அழுத போது கண்ணில் இருந்து ரத்தம் வந்தது. இதனால் ஒலிவாவுக்கு பயங்கர வலி ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அருகில் உள்ள கண் டாக்டரிடம் மகளை அழைத்து சென்றனர். தினசரி 3 முறை ஒலிவாவுக்கு முதலில் கண்ணில் போடுவதற்காக சொட்டு மருந்து கொடுத்தனர்.
ஆனால், மருந்து போட்டும் ஒலிவாவுக்கு வலியும் குறையவில்லை, ரத்த கண்ணீர் வருவதும் நிற்கவில்லை. தினமும் 3 முறை கண்களில் இருந்து கண்ணீருக்கு பதில் ரத்தம் வருகிறது. அரிய நோய் ஹெமோலாக்ரியா என்ற அரிய நோயால் யாரிட்ஷா பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர் கடந்த 2009ல் இதேபோல் ஹெமோலாக்ரியா நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் அழுத போதும் கண்ணில் இருந்து ரத்தம் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு மாதமாக கண்ணீர் கடந்த ஒருமாதகாலமாக பல கண் டாக்டர்களிடம் ஒலிவாவை பெற்றோர் அழைத்து சென்றனர்.
ஆனால், டாக்டர்களால் ஒலிவாவின் பிரச்னையை சரிசெய்ய முடியவில்லை. செலவுக்குப் பணமில்லையே மகளின் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன். நல்ல மனம் படைத்தவர்கள் உதவி செய்யுங்கள் என்று ஜோஸ் கோரிக்கை விடுத்துள்ளார். எனக்கு மட்டும் ஏன்? இதுகுறித்து யாரிட்ஷா கூறுகையில், எனக்கு என்ன சிகிச்சை அளிப்பது என்று யாருக்கும் தெரியவில்லை, ஏன் இப்படி நடக்கிறது, நான் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை என்று பீதியுடன் கூறுகிறார். அவரது ரத்தக்கண்ணீரைப் பார்த்து மருத்துவர்கள் மட்டுமல்லாது, அக்கம் பக்கத்தினரும் பீதியடைந்துள்ளனர்.
தனர்.