புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஒரு நிமிடத்தில் கிட்டத்தட்ட 802 முறை கைகளை தட்டி சாதனை படைத்துள்ளார் பிரையன் என்ற இளைஞர்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், தான் உலக சாதனை செய்கிறோம் என்ற விழிப்புணர்வே இல்லாமல் செய்தது தான்.

கடந்த 2003ம் ஆண்டில் கென்ட் என்ற பிரெஞ்ச் இளைஞர் நிமிடத்திற்கு 721 முறை கை தட்டியதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார்.

இந்நிலையில் லண்டனை சேர்ந்த பிரையன் என்ற இளைஞர், கென்ட்டை விட கூடுதலாக 81 முறை கை தட்டியுள்ளாராம்.

இவர் சமீபத்தில் யூடியூப்-ல் தனது கைதட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டார், அதனை இதுவரை 5லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டு களித்துள்ளனர்.

விளையாட்டாக வீடியோவை வெளியிட்ட இளைஞர், தற்போது தான் இதன் அருமை புரிந்து கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்துள்ளாராம்
 
Top