புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பிள்ளைகளால்
மகிழ்ச்சி உண்டாகும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பழைய நகையை தந்து விட்டு புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். ஆனால் செலவுகள் கூடும்.

திடீர் பயணங்களும் அதிகரிக்கும். வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடியும். தந்தைவழியில் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை தீரும். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். மனஇறுக்கம் உண்டாகும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும்.

சில நேரங்களில் கை, கால் மரத்துப் போகும். எனவே எளிய உடற்பயிற்சி, நடைப்பயிற்சியை மேற்கொள்வது நல்லது. வீடு, சொத்து பத்திரங்களை பாதுகாப்பாக பராமரிப்பது நல்லது. அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரர்கள் உதவுவார்கள். கன்னிப் பெண்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். அயல்நாட்டு நிறுவனங்களுடன் புது தொழில் தொடங்குவீர்கள். உத்‌தியோகத்தில் சக ஊழியர்கள் சில நேரங்களில் உங்களுடன் ஒத்துழைக்க முரண்டு பிடிப்பார்கள். ஆனால் மூத்த அதிகாரி ஆதரவாக இருப்பார். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளுக்கு வேறொருவர் உரிமை கொண்டாடுவார். வி. ஐ. பிகளின் ஆதரவால் வெற்றி பெறும் மாதமிது.


அதி‌ர்ஷ்ட தேதிகள் : 1, 3, 5, 10, 30
அதி‌ர்ஷ்ட எண்கள் : 6, 9
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், க்ரீம் வெள்ளை
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, புதன்

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் அனுபவ அறிவு வெளிப்படும். உங்களின் மாறுபட்ட அணுகுமுறையை கண்டு எல்லோரும் அதிசயிப்பார்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பழுதான வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக பார்த்து பேச நினைத்த நண்பர்கள், உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். சொத்துப் பிரச்னை தீரும். சகோதரங்கள் ஆதரவாக இருப்பார்கள். வழக்கில் வெற்றி கிட்டும். எங்குச் சென்றாலும் புகழடைவீர்கள். கௌரவம் ஒருபக்கம் உயரும்.

உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். என்றாலும் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். தந்தைவழி உறவினர்களால் அலைச்சல் இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும்.

கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் கூடுதலாக கடன் வாங்கி விரிவுப்படுத்துவீர்கள், அழகுப்படுத்துவீர்கள். உத்‌தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். முன்பு உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி இப்போது உங்களை ஆதரிப்பார். கேட்ட இடத்திற்கே மாற்றமும் கிடைக்கும். கலைத்துறையினர்களே! உங்கள் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். பழைய சிக்கல்கள் தீரும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 2, 6, 7, 16, 25
அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 7
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தாபச்சை, ரோஸ்
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : வியாழன், சனி

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் உங்களிடம் இருக்கும் சோர்வு களைப்பு நீங்கும். உற்சாகமாக புது முயற்சிகளில் இறங்குவீர்கள். வீடு, மனை விற்பது, வாங்குவதும் லாபகரமாக முடியும். புது வேலைக் கிடைக்கும். உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார்.

வேற்று மொழிக்காரர்களால் நிம்மதி உண்டாகும். வாகனத்தை சரி செய்வீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். திடீர் பயணங்களால் உற்சாகமடைவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வெள்ளி ஆபரணங்கள் சேரும். தடைப்பட்ட கல்யாணப் பேச்சு வார்த்தை மீண்டும் தொடரும். ஆனால் திடீர் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம்.

கண்ணை கொஞ்சம் பரிசோதித்துக் கொள்ளுங்கள். எடைமிகுந்த பொருட்களை தூக்க வேண்டாம். அரசியல்வாதிகளே! கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும். கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.

வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை புரிந்துக் கொண்டு புது முதலீடுகள் செய்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்‌தியோகத்தில் அமைதி நிலவும். சம்பள பாக்கி கைக்கு வரும். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள். தவிர்க்க முடியாத செலவுகளால் தர்மசங்கடத்தில் திணறும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 3, 1, 9, 10, 27
அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 5
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : கிரே, ப்ரவுன்
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : புதன், வெள்ளி

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் மனதிலே ஒரு தெளிவு பிறக்கும். தன்னம்பிக்கை உண்டாகும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்து வந்த சண்டை, சச்சரவு நீங்கும். உறவினர், நண்பர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். ஒரு சொத்தை தந்து மறுசொத்து வாங்குவீர்கள்.

சிலர் வீடு மாற வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள்.வாகனத்தை சீர் செய்வீர்கள். என்றாலும் மாதத்தின் மையப்பகுதியிலிருந்து சில நேரங்களில் சோர்வு, களைப்பு அடைவீர்கள். சிலர் உங்களை சீண்டி விட்டு, தூண்டி விட்டு வேடிக்கைப் பார்ப்பார்கள். முன்கோபத்தில் ஏதேனும் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள்.

தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள். ஆனால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வழக்கும் சாதகமாகும். மனைவிவழியில் உதவிகள் உண்டு. அரசியல்வாதிகளே! கட்சியின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசுவீர்கள்.

கன்னிப் பெண்களே! கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்வீர்கள். வேலையாட்கள் அவ்வப்போது முரண்டுபிடிப்பார்கள். உத்‌தியோகத்தில் உங்களுடைய திறமைகள் பாராட்டப்படும். சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். கலைத்துறையினர்களே! வருமானம் உயர வழி பிறக்கும். நெருக்கடிகளை சகிப்புத் தன்மையால் கடக்கும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 4, 1, 6, 26, 24
அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 8
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மெரூண், இளம்சிவப்பு
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : திங்கள், சனி

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். அழகு, இளமைக் கூடும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். மனைவிவழி உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள்.

ஹிந்தி, தெலுங்கு மொழிப் பேசுபவர்களால் நல்லது நடக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். சொந்த-பந்தங்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். வாகனத்தில் நெடுநாட்களாக இருந்து வந்த பழுதை சரி செய்வீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் சில நேரங்களில் படபடப்பாக இருப்பீர்கள். மற்றவர்களுக்காக பரிந்துப் பேசப் போய் நீங்கள் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

பல், காது வலி வந்து நீங்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். ஆனால் எத்தனைப் பிரச்னை வந்தாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கும் சக்தி உண்டாகும். வழக்கில் திருப்பம் ஏற்படும். பணப்புழக்கம் இருக்கும் ஆனால் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகளும் துரத்தும். அரசியல்வாதிகளே! வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும்.

கன்னிப் பெண்களே! வருங்காலம் குறித்து சில திட்டங்களை தீட்டுவீர்கள். வியாபாரத்தில் மாற்றுவழியை கையாளுவீர்கள். ரசாயனம், மருந்து, உணவு வகைகளால் லாபம் வரக்கூடும். உத்‌தியோகத்தில் செல்வாக்குக் கூடும். அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். புது சலுகைகளும் கிடைக்கும். கலைத்துறையினர்களே! பழைய நிறுவனத்திலிருந்து புது வாய்ப்புகள் வரும். மாற்றுப் பாதையில் சென்று புதிய தீர்வுகள் தேடும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 5, 6, 17, 23, 26
அதி‌ர்ஷ்ட எண்கள் : 7, 9
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மயில்நீலம், பிங்க்
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, செவ்வாய்

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். சொந்த ஊர் விஷயங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆனாலும் சிலர் உங்களைக் குறைக் கூறிக் கொண்டிருப்பார். அதற்காக உங்களின் உதவும் குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டாம். ஆனால் மாதத்தின் மையப்பகுதியிலிருந்து சில நேரங்களில் கறாராகப் பேசி சிலரின் மனதை புண்படுத்துவீர்கள்.

பேச்சிலே காரத்தை குறைத்து கொஞ்சம் இங்கிதமாகப் பேசுவது நல்லது. பணவரவு இருந்தாலும் செலவுகள் அதிகமாகிக் கொண்டேப் போகும். கைமாற்றாக கொஞ்சம் பணம் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். எதிர்காலம் பற்றிய ஒரு பயத்தை உண்டாக்கும். பிள்ளைகளிடம் முக்கிய குடும்ப விஷயங்களை பகிர்ந்துக் கொள்வதில் தவறில்லை.

சிலர் உங்களிடம் நடிப்பதாகவும், உங்களிடம் யாரும் உண்மையான பாசம் காட்டுவதில் என்றும் சில நேரங்களில் நினைப்பீர்கள். நெருங்கிய உறவினர்கள் உங்களைக் குறைக் கூறிப் பேசுவார்கள். மாதத்தின் பிற்பகுதியில் எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். வேற்றுமொழிக்காரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

கன்னிப் பெண்களே! நல்ல வரன் அமையும். புது நட்பு மலரும். வியாபாரம் சூடுபிடிக்கும். வேலையாட்கள் உங்களைப் புரிந்துக் கொண்டு வலிய வந்து உதவுவார்கள். உத்‌தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புத் திறன் வளரும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 6, 13, 14, 15, 24
அதி‌ர்ஷ்ட எண்கள் : 4, 6
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ்பச்சை, சில்வர்கிரே
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : புதன், வெள்ளி

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் உங்களின் எண்ணத்திற்கு தகுந்தாற் போல் சில காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். தாயாரின் உடல் நிலை சீராகும். வீடு, மனை வாங்குவது விற்பது சாதகமாக முடியும். சகோதரங்கள் பொருளுதவிகள் செய்வார்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. அரசு அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள்.

திடீர் பயணங்கள் வரும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். புது வேலையில் சென்று அமர்வீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை குடும்பத்துடன் நிறைவேற்றுவீர்கள். நெருங்கிய உறவினர், நண்பர்கள் விரும்பி வந்துப் பேசுவார்கள். என்றாலும் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும். ஓய்வெடுக்க முடியாதபடி கொஞ்சம் அலைச்சலும் இருக்கும்.

மையப்பகுதியிலிருந்து ஓரளவு பணவரவு உண்டு. பிரச்னைக்குரிய விஷயங்களை கையில் எடுத்து அதில் வெற்றி காண்பீர்கள். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். உங்களின் தனித்திறமைகள் வெளிப்படும். அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்துக்கு கொண்டு செல்லுங்கள். கன்னிப் பெண்களே! திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். பழைய நண்பர் ஒருவர் மூலமாக சில உதவிகள் கிடைக்கும். பாக்கிகள் வசூலாகும். உத்‌தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். புது சலுகைகள் கிடைக்கும். கலைத்துறையினர்களே! உங்களின் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். ஆளுமைத் திறனும், செல்வாக்கும் அதிகரிக்கும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 7, 11, 16, 15, 24
அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 5
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, வெள்ளை
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, வியாழன்

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். நண்பர்களிடம் இருந்து வந்த பகை நீங்கும். உறவினர்களும் ஒத்தாசையாக இருப்பார்கள். வேற்றுமொழிப் பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். புறநகர் பகுதியில் இருந்த ஒரு இடத்தை நீங்கள் விற்க வேண்டி வரும். அதன்மூலம் கடன் பிரச்னையில் ஒருபகுதி தீர வாய்ப்பிருக்கிறது.

புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். வங்கி லோன் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். ஆனால் மாதத்தின் பிற்பகுதியில் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். உங்களைப் பார்த்தால் ஒரு பேச்சு, பார்க்காவிட்டால் ஒரு பேச்சு என்று நடந்துக் கொள்வார்கள்.

சில நேரங்களில் நம்பிக்கை இல்லாமல் போகும். உடன்பிறந்தவர்களால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். குடும்ப வருமானம் உயரவில்லை ஆனால் தேவைகளும், செலவுகளும் பெருகிக் கொண்டே போகிறதே எப்படி நாம் சமாளிக்க போகிறோமோ என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். அரசியல்வாதிகளே! மேலிடத்திற்கு சில ஆலோசனைகள் தருவீர்கள்.

கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். காதல் கைக்கூடும். வியாபாரத்தில் திடீர் லாபம், யோகம் உண்டாகும். உத்‌தியோகத்தில் உயரதிகாரிகளுடன் இருந்து வந்த உரசல் போக்கு நீங்கும். சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும். கலைத்துறையினர்களே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். எதிர்பாராத சந்திப்புகளும், திடீர் திருப்பங்களும் நிறைந்த மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 5, 6, 14, 15, 17
அதி‌ர்ஷ்ட எண்கள் : 4, 9
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மெரூண், மஞ்சள்
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், வெள்ளி

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு, இந்த மாதத்தில் எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு உண்டு. எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.

புது வேலை அமையும்.வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள். சகோதரங்களும் பக்கபலமாக இருப்பார்கள். தந்தைவழியிலும் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும்.வெளிநாட்டிலிருப்பவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். ஆனால் மனைவியில் ஆரோக்யத்தில் அக்கறைக் காட்டுங்கள்.

உங்கள் தன்மானத்தை பாதிக்குமளவிற்கு சில சொந்த-பந்தங்கள் நடந்துக் கொள்வார்கள். பேசுவார்கள். மனைவி ஏதேனும் உங்கள் தவறுகளை சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். கோபப்படாதீர்கள்.வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். இரு சக்கர வாகனத்தை இயக்கும் போது தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். அரசியல்வாதிகளே! தலைமையின் அன்புக்கு பாத்திரமாவீர்கள்.

கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் தள்ளி இருங்கள். பெற்றோரை தவறாகப் புரிந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் போராடி லாபம் பெறுவீர்கள். பழைய பாக்கிகளையும் இங்கிதமாகப் பேசி வசூல் செய்வீர்கள். உத்‌தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். பாராட்டப்படுவீர்கள்.

இடமாற்றமும் கிடைக்கும். சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனங்களில் புது வேலை வாய்ப்பு தேடி வரும். கலைத்துறையினர்களே! கிசுகிசுத் தொந்தரவுகள், வதந்திகளெல்லாம் வந்தாலும் அஞ்சமாட்டீர்கள். எதிர்நீச்சலில் வெற்றி பெறும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 9, 10, 18, 24, 27
அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 8
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : இளம்சிவப்பு, நீலம்
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : திங்கள், புதன்
 
Top