புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இலங்கை வாலிபர் ஒருவர் கடந்த ஐந்து வருடங்களாக தான் உணவெதனையும் உட்கொள்ளாது உயிர்வாழ்ந்து வருவதாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். சுவாசப் பயிற்சியை மேற்கொண்டுள்ள கேர்பி டி லெனரோல் எனும்
வாலிபர் ஒருவரே இவ்வாறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
காற்று, வெளிச்சம் மற்றும் கடவுளின் வேகமான அதிர்வலைகளை மாத்திரமே சுவாசித்து தான் உயிர்வாழ்வதற்கான சக்தியை தேடிக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன் தனது வாழ்க்கை முறை முதுமை அடையும் நிலையை தலைகீழாகப் புரட்டிப் போடும் என்று தெரிவித்துள்ள அவர், தான் இப்போது என்றைக்கும் இளமையாக, நீண்ட காலம் உயிர்வாழ்ந்திருக்கும் சிரஞ்சீவி நிலையை எட்டிவிட்டதாகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

மேலும் தான் மேற்கொண்டு வரும் மூச்சுப் பயிற்சியை ஏனையோருக்கு கற்றுக் கொடுக்க தான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள லெனரோல், அது தொடர்பில் பல இடங்களில் இருந்தும் தனக்கு அழைப்புகள் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இந்த இளைஞர் குறித்து அமெரிக்க இணையத்தளம் ஒன்றிலும் செய்திகள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
 
Top