புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சகோதரியை மனநிலை பாதிக்கப்பட்ட காரணத்திற்காக தனி அறையில் அடைத்து வைத்த கொடுமைகோவை மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே சாமிவந்ததாகக் கோரப்பட்ட மனைவி தன் கணவனின் கண்களில் விரல்களை விட்டு ஆட்டி அவர் பார்வையை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டம், உடுமலைபேட்டை அருகே உள்ள திருமூர்த்திமலை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி மல்லப்பன் (40). இவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கணவன் மனைவி இருவர் மட்டும் புதன்கிழமை வீட்டில் இருந்துள்ளனர். அப்போது, மல்லப்பனின் கண்களை அவரது மனைவி காளியம்மாள் குத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால், மல்லப்பனின் கண்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, கோவை அரசு பொது மருத்துவமனையில் உடனடியாக அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இரு கண்களும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருந்தபோதும், கண்களின் கருவிழிகள் கடுமையாகச் சேதம் அடைந்ததால் மருத்துவர்கள் தீவிரமாக முயன்றும் அவரது பார்வையை மீட்க முடியவில்லை. கணவன், மனைவி இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் புதன்கிழமை வரை வீட்டை விட்டு வெளியே வரவில்லையாம். இருவரும் வீட்டின் கதவை தாழிட்டுக் கொண்டு “பூஜை” செய்து வந்தனராம்.

புதன்கிழமை நள்ளிரவு நேரத்தில் திடீரென மல்லப்பனின் மனைவி காளியம்மாளுக்கு சாமி வந்ததாகவும், இதனால், பக்கத்திலிருந்த தடியை (கம்பு) எடுத்துக்கொண்டு சாமியாட்டம் போட்டதில், கம்பு குத்தியதில், மல்லப்பனின் கண்கள் பாதிக்கப்பட்டதாக அவரது உறவினர்கள் மருத்துவர்களிடம் கூறியுள்ளனர். மல்லப்பனின் மனைவி காளியம்மாள் சற்று மனநிலை பாதிப்புக்கு உள்ளானவர் என்று கூறப்படுகிறது.
 
Top