புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் வசிக்கும் கேத்தரின் கியூ (50) தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி வழக்கு தொடுத்து விட்டு தீர்ப்புக்காக காத்திருந்தார்.


கடந்த 2011 ஜூலை மாதத்தின் ஓர் நள்ளிரவில் கேத்தரின் கியூவிற்கும் அவரது கணவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வலுத்தது.

இதனால், ஆத்திரடைந்த கேத்தரின், கணவனுக்காக தயாரித்த சூப்பில் தூக்க மாத்திரையை கலந்து தந்தார்.

மயங்கி விழுந்த கணவனை கட்டிலோடு கட்டிப் போட்ட ‘அன்பு மனைவி’, அவர் மயக்கம் தெளிந்து எழுந்ததும் 10 அங்குல நீளம் கொண்ட கத்தியால் கணவரது பிறப்புறுப்பை வெட்டி எடுத்து ‘அதை’ குப்பைத் தொட்டியில் வீசினார்.

போலீசாருக்கு போன் செய்து கணவருக்கு அளித்த தண்டனை பற்றி வாக்குமூலம் அளித்த கேத்தரின் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரது கணவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

சுமார் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளித்த நீதிபதி, கேத்தரினுக்கு ஆயுள் தண்டனை விதித்தார்.

தண்டனை காலத்தின் முதல் 7 ஆண்டுகள் வரை அவரை பரோலில் விடக்கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

 
Top