ஒரு துளி ரத்தத்தில் அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் எலியை உருவாக்கி ஆராய்ச்சியாளர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
முதன் முறையாக குளோனிங் முறையில் டோலி என்ற ஆடு உருவாக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பன்றிகள் போன்ற விலங்கினங்கள் உருவாக்கப்பட்டன.
தற்போது அதி நவீன முறையில் ஒரு துளி ரத்தத்தில் பெண் எலியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
ஜப்பானின் கோபே நகரில் உள்ள ரிகென் மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே இந்த சாதனையை படைத்துள்ளனர்.
இந்த எலி மற்ற எலிகளை போன்று அன்றாட வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளது.
இவற்றால் இயற்கை முறையில் ஆண் எலியுடன் சேர்ந்து கருத்தரித்து குட்டி போட முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.