மனித இனத்தின் முன்னோடிகள் எலியை விட சிறிய உருவம் கொண்டிருந்ததாக சீன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் உள்ள சைனீஸ் அகடமி ஆப் சயின்ஸ்-ல் டாக்டர் நீ சின்ஜூ தலைமையிலான ஆய்வாளர்கள்
குழு மனித இனத்தின் முன்னோர்கள் குறித்த புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களும், இதில் பங்கேற்று கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது, மனித இனத்தின் முன்னோடிகள் ஆரம்ப காலத்தில் மிகவும் சிறிய உருவம் கொண்ட உயிரினமாக இருந்தன.
இவை 71 மி.மீ, உயரமும் 20 - 30 கிராம் எடையும் கொண்டதாக காட்சியளித்தன.
இந்த உயிரினங்கள் கூர்மையான கண் பார்வையையும், சிறிய பூச்சிகளை வேட்டையாடும் வகையில் கூர்மையான பற்களையும் கொண்டிருந்தன.
இவை மரம் விட்டு மரம் தாவும் வலிமையையும் பெற்றிருந்தன. இந்த உயிரினங்கள் 5.5 கோடி ஆண்டுகளுக்கு முன் உயிர் வாழ்ந்தன.
மேலும் இவை தோற்றத்திலும், அவற்றின் செயல்பாட்டிலும் குரங்குகள் மற்றும் ஆதி மனிதனை ஒத்து காணப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்து:
கருத்துரையிடுக