புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தமிழில் கல்கி திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ஸ்ருதி, நேற்று இரண்டாவது திருமணம் செய்துகொள்ள கர்நாடகாவில் உள்ள
மாருதிபுராவில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துகொள்ள குடுபத்தினருடன் சென்றார். அங்கு அவருக்கு தடை விதிக்கப்பட்டதால் அவர் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோயிலில் நேற்று இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

பிரபல கன்னட நடிகை ஸ்ருதி, தமிழில் கல்கி என்ற படத்தில் கே.பாலச்சந்தாரல் அறிமுகப்படுத்தப்பட்டார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் கன்னட திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார். தற்போது தமிழ் நாடகம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

கன்னட பட இயக்குனர் எஸ்.மகேந்தரை திருமணம் செய்து சில ஆண்டு கள் வாழ்க்கை நடத்தினார். 3 வருடத்துக்கு முன் பிரிந்து விவாகரத்து பெற்றார். பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து செயல்பட்ட அவர், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பாஜவில் இருந்து விலகி, கர்நாடக ஜனதா கட்சியை தொடங்கியதும், அதில் இணைந்து தீவிர தேர்தல் பிரசாரம் செய்தார். சில ஆண்டுகளாக பத்திரிக்கையாளர் சந்திரசேகருடன் பழகி வந்தார். அவர்கள் நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தனர்.

அதன்படி ஷிமோகா மாவட்டம், ஒசநகர் தாலுகா, மாருதிபுரா அருகில் வரதா நதியோரத்தில் உள்ள பழமையான பாணேஷ்வர, வெங்கடரமண, ஆஞ்சநேயசாமி திருகோயிலில் நேற்று காலை ஸ்ருதி,சந்திரசேகர் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு கோயில் வளாகத்தில் வரபூஜையும் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் ஆஞ்சநேயசாமி கோயிலில் அவர்கள் திருமணம் செய்து கொள்வது தொடர்பாக கோயில் நிர்வாகத்திடம் அனுமதி பெறவில்லை என்பதால், திருமணத்துக்கு கோயில் நிர்வாகம் தடை விதித்ததாக தெரிகிறது. கோயில் நிர்வாகத்திற்கு எதிராக இரு குடும்பத்தினர் வாக்குவாதம் நடத்தினர். கடைசி வரை கோயிலில் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

அதை தொடர்ந்து திட்டமிட்டபடி சுபமுகூர்த்த நேரத்தில் திருமணம் செய்ய தீர்மானித்த இரு குடும்பத்தினரும், உடனடியாக கொல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற மூகாம்பிகை கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்தபின், ஷூட்டிங் ஒன்றில் கலந்துகொள்ள ஸ்ருதி சென்னை புறப்பட்டு சென்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top