தற்கொலை செய்து கொண்ட பிரபல இந்தி நடிகை ஜியா கான் எழுதிய 6 பக்க கடிதம் கிடைத்துள்ளது.
இந்த கடிதம், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஜியா கான் எழுதிய கடிதம் அல்ல என்றும், அதற்கு முன்பே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனம்
உடைந்து அதனை காகிதத்தில் எழுதியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
ஜியா கானின் உடமைகளை அவரது தாயும், சகோதரியும் நேற்று எடுத்துப் பார்த்த போது இந்த கடிதம் கிடைத்துள்ளது.
அதில் ஒருவரை தான் மிகவும் நம்பியதாகவும், ஆனால், அவர் அதன்படி நடந்து கொள்ளவில்லை என்றும், அவருக்காக தான் மருத்துவ சிகிச்சைக் கூட எடுத்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் குறிப்பிட்ட நபரைப் பற்றி தெளிவாக எதையும் அவர் கூறவில்லை.
இந்த கடிதத்தின் நகலை குடும்பத்தினர் காவல்துறையினரிடம் ஒப்படைக்க உள்ளனர். அது பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது.
ஜியா கானின் நண்பர்கள் மூலமாக அவர் எந்த விதமான சிகிச்சை எடுத்துக் கொண்டார், எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்ற விவரங்களை அறிய குடும்பத்தினர் முயற்சித்து வருகின்றனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக