புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் ஜே.வி. ராகவுலு நேற்று காலமானார்.
82 வயதான ராகவுலு கடந்த சில மாதங்களாக உடல் நலமின்றி இருந்தார்.


இந்நிலையில் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி அருகே மங்களவரபுபெட்டாவிலுள்ள அவரது வீட்டில் காலமானார்.

மறைந்த ராகவுலுக்கு மனைவி மற்றும் நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

பாடகராக சினிமாவில் அறிமுகமாகிய ராகவுலு, 170க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

பிரபல இசை அமைப்பாளர்கள் கண்டசாலா, கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோருடன் இணைந்து பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top