ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்கள் விடுதியின் குளியலறைக்கு அருகே கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாரத்பூரில் இருக்கும் ஒரு பெண்கள் விடுதியில், குளியலறைக்கு அருகில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது.
பெண்கள் குளியலறையை பயன்படுத்துவதை சுலபமாக படம் பிடிக்கும் விதத்தில் அமைக்கபட்டிருந்தால் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பெண்கள் விடுதி தொடர்பாக சமீப காலமாக சில புகார்கள் வந்திருந்த நிலையில், அந்த இடத்திற்கு திடீரென சென்று சோதனை மேற்கொண்ட காவல் துறை அதிகாரி, பெண்கள் உபயோகப்படுத்தும் குளியலறை அருகே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படிருந்ததை கண்டார்.
இதுதொடர்பாக அந்த பெண்கள் விடுதியின் உரிமையாளர் பங்கஜ் என்பவரை போலீசார் விசாரித்த போது, அவர் இந்த கேமராக்கள் விடுதியை கண்காணிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது எனவும், இதனால் விடுதியில் தங்கியிருக்கும் பெண்களுக்கு பாதிப்பு அளிக்கும் வகையில் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறியிருக்கிறார்.
ஆனால், விடுதி உரிமையாளர் அளித்த விளக்கத்தால் சமாதானம் அடையாத போலீசார், அவரது லாப்டாப் மற்றும் கேமராக்களில் பதிவான வீடியோக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக