புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பதுளை நகரில் மூன்று மாடி கட்டடம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்களில் ஒருவர் மூன்றாம் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (06) இரவு 08.30 அளவில் இடம்பெற்றுள்ளது.


மூன்றாம் மாடியில் இருந்து கீழே விழுந்தவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளார்.

படல்கும்புர - அலுபொத்த பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஹசன் பசிர் என்பரே உயிரிழந்தவராவார். பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top