புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணியில் பஸ்ஸின் சில்லில் சிக்கி 2 வயது குழந்தை பலியான சம்பவம் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.


ஏறாவூர் பொலிஸ் பிரிவு, களுவன்கேணி காளிகோயில் வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில், புஸ்பராசா சதுர்நிஸா என்ற இரண்டு வயது குழந்தையே பலியாகியுள்ளது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸை சாரதி பின்புறமாகச் செலுத்தியபோது குழந்தை பஸ்ஸின் சில்லில் சிக்கி பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தையின் சடலம் தற்போது செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top