ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூர்யா, அசின் மற்றும் நயன்தாரா நடித்த படம் கஜினி. இந்த படம் ஹிந்தியிலும் இதே பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
அப்போது தமிழில் நயன்தாரா நடித்த வேடத்தில் ஹிந்தியில் ஜியாகான் நடித்திருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் ஹிந்தி நடிகை ஜியாகான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் வெளியானபோது, சிலர் கஜினி படம் என்றதும் நயன்தாராவாகத்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு பேஸ்புக், டுவிட்டர்களில் செய்தி பரப்பி விட்டார்களாம்.
இதனால் கேரளாவில் உள்ள நயன்தாராவின் பெற்றோரும், உறவினர்களும் பலத்த அதிர்ச்சியடைந்தார்களாம். அதனால் உடனடியாக நயன்தாராவுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளனர்.
ஆனால், ஆந்திராவில் அனாமிகா படப்பிடிப்பில் இருந்த நயன்தாராவுக்கு சரியாக லைன் கிடைக்காமல் போக, அவர்களின் அதிர்ச்சி இன்னும் அதிகமானதாம்.
ஒரு அரை மணி நேரத்துக்குப்பிறகு நயன்தாரா லைனில் கிடைத்தபோது, நான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ளவில்லை. அப்படி கோழைத்தனமாக சாகவும் மாட்டேன் என்று சிரித்துக்கொண்டே சொன்னாராம்.
அதன்பிறகுதான் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள் அவரது பெற்றோர். அதையடுத்து, நயன்தாராவின் டுவிட்டரில் தற்கொலை செய்து கொண்டது ஹிந்தி கஜினி படத்தில் தமிழில் நயன்தாரா நடித்த வேடத்தில் நடித்த ஜியாகான் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
பின்னர் தொலைக்காட்சிகளில் செய்திகள் திரும்பத்திரும்ப வெளியானபோது நயன்தாரா பற்றிய வதந்தி மறைந்திருக்கிறது.

0 கருத்து:
கருத்துரையிடுக