புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அமெரிக்காவில் உள்ள கென்சாஸ் நகரின் காற்பந்து விளையாட்டு வீரரான ஜொவன் பெல்செர் தனது காதல் மனைவியைச் சுட்டு
கொன்ற பின், “எனது செயலிற்காக நான் வருந்துகிறேன் அன்பே” எனக்கூறி அவரது நெற்றியில் முத்தமிட்டு விட்டு வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.


நீண்டகாலமாக காதலித்து மனம்புரிந்த இந்தத் தம்பதிகளிற்கு மூன்றே மாதமான ஒரு குழந்தையுள்ளது என்பதே மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இவ்வாறு வீட்டை விட்டு வெளியேறிச் சென்ற மேற்படி விளையாட்டு வீரர் நேரடியாகவே தங்களது விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் மைதானத்திற்கு சென்றுள்ளார்.

அங்கே தனது அணியின் முகாமையாளரையும், தங்களது பயிற்றுவிப்பாளரையும் வெளியே அழைத்த மேற்படி விளையாட்டு வீரர் தன்னை மன்னிக்குமாறு அவர்களிடம் கேட்டுவிட்டு தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துள்ளார். இச் சம்பவம் அமெரிக்காவையே மிகுந்த பரபரப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.

சமையலறையில் இருந்த மேற்படி வீரரின் தாயார் துப்பாக்கிச்சூட்டுச் சத்தம் கேட்டதும், மகனின் அறைக்கு ஓடிச்சென்று பார்த்த போது அவர்களது அறையிலுள்ள குளியல் அறையில் இறந்த தனது காதலியிடம் மன்னிப்புக் கேட்டு “எனது செயலிற்காக நான் வருந்துகிறேன்” என நெற்றியில் முத்தமிட்டு விட்டு அவ்விடத்தை விட்டு மகன் வெளியேறியதாகத் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு சென்ற மேற்படி வீரர் தான் தனது மனைவியைக் கொன்ற விவகாரத்தை தனது அணியின் முகாமையாளரிற்கும் பயிற்றுவிப்பாளரிற்கும் தெரிவித்ததோடு, தனது மகளைப் பராமரிப்பீர்களாயின் அதுவே நீங்கள் எனக்குச் செய்யும் பெரிய உதவியெனக் கூறித் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துள்ளார். 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top