புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ் நகர்ப் பகுதி பிரபல பாடசாலை ஒன்றில் பரீட்சைகள் நடைபெற்று பெறுபேறுகள் வழங்கப்பட்ட நிலையில் தவனை விடுமுறை நாள் அன்று அவ் வகுப்பு ஆசிரியர் செய்த மொக்குத்தனமான செயல் ஒரு மாணவனை மனநிலை பாதிப்புக்கு உள்ளாக்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

 
ஆண்டு 8ல் கல்வி பயிலும் மேற்படி மாணவன் நேற்று இரவு முதல் அலறிய வண்ணம் இருக்கின்றார். இவரை நாம் சென்று பார்த்த போது மிகுந்த சோர்வுடனும் ஒருவித விரத்தியுடனும் காணப்படுவதை அவதானிக்க முடிந்தது. இது தொடர்பாக பெற்றோர் எமக்குத் தகவல் தருகையில் 'உலகம் அழிவு பற்றி தனது சகோதரியுடன் அடிக்கடி விவாதித்து வந்தவனை நாம் அதட்டி வைத்திருந்தோம்.

தனது சகோதரியையும் பயப்படுத்தி தன்னையும் பயப்படுத்திக் கொண்டிருந்தவனுக்கு அவனது வகுப்பாசிரியரும் 'உலகம் அழியப்போவது உண்மைதான் எனத் தெரிவித்துள்ளார். இந் நிலையில் இவன் நேற்று மாலையில் வந்து சாப்பிடாது எம்மையும் தொலைக்காட்சி பார்க்கவிடாது கத்திவிட்டு படுத்துவிட்டான். பின்னர் இரவு எழுந்த அவன் தற்போது வரை நித்திரை கொள்ளாது உள்ளதாகத் தெரிவித்தார்கள்.

குறித்த மாணவனுடைய வகுப்பாசிரியரின் தொலைபேசி இலக்கத்தைஅப் பாடசாலை அதிபரைத் தொடர்பு கொண்டு மிகுந்த சிரமப்பட்டு வாங்கிய நாம் அவரைத் தொடர்பு கொண்ட போது அவர் எமக்கும் 'அதே றீல் ' விட்டுள்ளார் தற்போது நீங்கள் எங்கு நிற்கின்றீர்கள் என நாம் வினாவிய போது தான் ரீயுசன் ஒன்றில் நிற்பதாகவும் இது தொடர்பாக விவாதத்திற்கு வருவதானல் ரியூசன் முடிந்த பின் இன்று மாலை 4 மணியளவில் வருவதாகவும் தெரிவித்தார். உலகம் அழயப் போகுது எனத் தெரிவித்த நீங்கள் பின்னர் ஏன் இப்போதும் படிப்பித்துக் கொண்டு இருக்கின்றீர்கள் என கேட்ட போது அவர் தொடர்பைத் துண்டித்து விட்டார். வெகு விரைவில் அவரை நாம் உங்கள் முன் கொண்டு வர ஆயத்தம் செய்கின்றோம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top