புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து குவைத் நோக்கி எகிப்து நாட்டுக்கு சொந்தமான விமானம் ஒன்று 90 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. அதில் ஜோர்டன் நாட்டை சேர்ந்த ஒருவன் எகிப்தியன் கோப்ரா எனப்படும் நல்லப்பாம்பு ஒன்றை அந்த விமானத்தில் தெரியாமல் கடத்தியிருக்கிறான். பாதி வழியில்
சென்றுகொண்டிருந்தபோது அந்த பாம்பு பையிலிருந்து நழுவி அவனை கடித்திருக்கிறது.

பின்னர் இருக்கைக்கு அடியில் நழுவிய அந்த பாம்பை மற்ற பயணிகள் கட்டுப்படுத்த முயன்று இருக்கின்றனர். இதனை தொடர்ந்து அந்த விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் விமானி உடனடியாக விமானத்தை செங்கடல் அருகே அல் கருடகா நகரில் தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

பிறகு பாம்பை கடத்தியவனுக்கு அங்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற செய்தி வெளிவந்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top